சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

16th Sep 2021 08:40 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (வியாழக்கிழமை) 74.18 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,750 கன அடியிலிருந்து 11,521 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.40 டி.எம்.சி.யாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரியில் கணிசமாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Tags : mettur
ADVERTISEMENT
ADVERTISEMENT