சேலம்

சங்ககிரி அரசுப் பள்ளியில் மூலிகை, பூச்செடிகள் கொண்ட தோட்டம் அமைப்பு

7th Sep 2021 01:24 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூக்கள், மூலிகை செடிகள் மூலம் தோட்டம் அமைக்கும் பணிகள் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இயற்கை சூழலில் கல்வி கற்பதற்கு ஏதுவாக பள்ளி நிர்வாகமும், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையும் இணைந்து பள்ளி வளாகத்தில் செம்பருத்தி, கறிவேப்பிலை, திருநீற்று பத்து தலை, துளசி, மஞ்சள், செவ்வரளி, செவ்வந்தி, குண்டு மல்லிகை   உள்ளிட்ட  பல்வேறு வகையான பூக்கள், மூலிகை செடிகளை நட்டு வைத்தனர்.

தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் கே.சண்முகம், துணைத் தலைவர் பொன்.பழனியப்பன்,  செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கிஷோர்பாபு, முருகேசன், சதீஷ்குமார் , பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிச்சாமி, நிர்வாகி பசுமை சீனிவாசன், அமுதச் சுடர் அறக்கட்டளைத் தலைவர் வி.சத்தியபிரகாஷ்,  நவீன், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT