சேலம்

சங்ககிரி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க செயற்குழுக்கூட்டம் 

2nd Sep 2021 03:23 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம்,சங்ககிரி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் சார்பில்  செயற்குழுக்கூட்டம்  சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் அச்சங்கத்தின் உறுப்பினர் அன்புமணி அண்மையில் காலமானதையடுத்து அவரது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். 

செயலர் ஜி.குணசேகரன் வரவேற்றார்.  பொருளாளர் சி.கந்தசாமி,  கௌரவ ஆலோசகர் மாதையன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், நிர்வாகிகள் தனபால், சீனிவாசன், வடிவேல், நிர்மல்குமார் உள்ளிட்ட கலந்து இதில் கொண்டனர் 

கரோனா தொற்றால் லாரி தொழிலைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலையிழந்து வருவதால் அவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

Tags : சங்ககிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT