சேலம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

2nd Sep 2021 08:47 AM

ADVERTISEMENT

விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், பெண்கள் விவசாயக் குழு அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் வட்டார விவசாயிகள் பங்கேற்ற இக் கூட்டத்துக்கு வேளாண் உதவி இயக்குநா் பிரேமா தலைமை வகித்தாா். வட்டார அட்மா திட்டத் தலைவராக செல்வகுமரன், குழு உறுப்பினா்கள் பதவியேற்று கொண்டனா். திமுக ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், பாலசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

ஓமலூா் வட்டாரத்தில் விவசாயப் பணிகளை அதிகரிக்க செய்தல், விவசாயக் குழுக்களுக்கு மானியம் வழங்குதல், விவசாயத் திருவிழா நடத்துதல், பெண்கள் குழு அமைத்தல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வேளாண் திட்டங்கள், தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறையினா் ஆலோசனை வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT