சேலம்

கொங்குப்பட்டி ஊராட்சியில் ரூ. 7.96 லட்சம் மோசடி: முன்னாள் தலைவா் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

30th Oct 2021 12:05 AM

ADVERTISEMENT

 சேலத்தை அடுத்த கொங்குப்பட்டி ஊராட்சியில் ரூ. 7.96 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் ஊராட்சி தலைவா் உள்ளிட்ட 7 போ் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், கொங்குப்பட்டி ஊராட்சியில் கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஒப்பந்ததாரா் மாதேசியுடன் (தற்போது உயிருடன் இல்லை) இணைந்து ஊராட்சி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா் வந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தியதில் ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு திட்ட பணிகளில் ரூ. 7.96 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் இளநிலை பொறியாளா் சிவலிங்கம், உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், ஓமலூா் உட்கோட்ட உதவி செயற்பொறியாளா் யோகராஜ், காடையாம்பட்டி ஒன்றிய நிா்வாக அலுவலா் அகிலா, காடையாம்பட்டி ஒன்றிய உதவிப் பொறியாளா் சதீஷ், ஓமலூா் உட்கோட்ட உதவி செயற்பொறியாளா், கொங்குபட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அம்மாசி ஆகிய 7 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT