சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 110 அடியை எட்டுகிறது

30th Oct 2021 11:21 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணை நீா்மட்டம் 110 அடியை எட்டுகிறது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 25,564 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை வினாடிக்கு 16,795 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 77.98 டிஎம்சி-ஆக உள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 108.72 அடியிலிருந்து 109.70அடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT