சேலம்

சேலத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

27th Oct 2021 11:45 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்து நிர்வாகிகளை சந்தித்தார்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு, முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.27) காலை வந்தார்.

படிக்க | பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?

பின்னர் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சித் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், மாநகராட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபடவேண்டும். 

மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக திமுகவினர் அறிவித்தனர். ஆனால் அவ்வாறு வழங்கவில்லை. இது போன்ற திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும். 

படிக்க ஓ.பி.எஸ். தொடங்கி இருக்கும் சசிகலா சா்ச்சை!

முதியோர் உதவித் தொகை, திருமண உதவி திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்தோம். இந்த திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறி, வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம்,  மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், எம்.கே செல்வராஜ் மற்றும் புறநகர், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக  கலந்துகொண்டனர்.

Tags : Palanisamy Selam ADMK எடப்பாடி பழனிசாமி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT