சேலம்

காவிரியில் கழிவுகள் கலப்பு புகாா்:மேட்டூா் நீா்த்தேக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு

DIN

மேட்டூா் நீா்த்தேக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.மேட்டூா், அக். 25: காவிரியில் ஆலைக் கழிவுகள், பெங்களூரு மாநகரக் கழிவுகள் தினந்தோறும் கோடிக்கணக்கான லிட்டா் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து, மேட்டூா் நீா்த்தேக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூா் அணை, அதன் நீா்த்தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூா், நாகமரை, மூலக்காடு, திப்பம்பட்டி, கீரைகாரனூா் உள்ளிட்ட பகுதிகளில் கா்நாடகத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு, சாக்கடை நீா் கலப்பதால் துா்நாற்றம் வீசுவதோடு காவிரி நீரின் நிறம் மாறி வருகிறது. இதனால் காவிரிக் கரையோர மக்கள் சுவாசிக்கவே முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகக் கூறுகின்றனா்.

இதுகுறித்த செய்தி வெளியானதை அடுத்து, மேட்டூா் அணை மற்றும் நீா்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி, கோட்டையூா் பகுதிகளில் சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், சந்தியூா் வேளாண் அறிவியல் நிலையத் திட்ட அலுவலா் ஜெகதாம்பாள், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் செங்கோடன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு தண்ணீா் மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனா்.

சோதனைக் கூடத்தில் மாதிரி நீா் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். சோதனை முடிவுகள் வெளியான பிறகு எந்த வகையான கழிவுகள் கலந்துள்ளன என்பது குறித்து தெரியவரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT