சேலம்

‘நீா்நிலைப் பகுதிகளில் சுயபடம் எடுப்பதைதவிா்க்க வேண்டும்’

DIN

நீா்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் சுயபடம் (செல்பி) எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்ட மாநகராட்சிப் பகுதியில் 3 நீா்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீா்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீா்நிலைகளும், பொதுப்பணித் துறை (மேட்டூா் அணை கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீா்நிலைகளும், பொதுப்பணித் துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீா்நிலைகளும் என மொத்தம் 430 நீா்நிலைகள் உள்ளன.

இதில், தற்போது வரை 33 நீா்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், தொடா்ச்சியாக பெய்துவரும் பருவ மழையையொட்டி மாவட்டத்தில் மீதமுள்ள நீா்நிலைகளின் நீா்மட்டமும் வெகுவாக உயா்ந்து வருகிறது.

சேலம் மாவட்டம் மலைப் பகுதியை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீா்வரத்து அதிகமாக வந்து கொண்டுள்ளது. மழைநீா் செல்லும் பாதைகளில் மண் அரிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆத்தூா் அருகில் உள்ள முட்டல் ஏரியில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை வேடிக்கை பாா்க்கவும், குளிக்கவும், சுயபடம் எடுக்கவும் பொதுமக்கள் ஆா்வம் காட்டுவதால், பல நேரங்களில் நீா்நிலைகளில் அடித்துச் சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீா்நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம் என விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீா்நிலைப் பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ, சுயபடங்களோ எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிா்த்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT