சேலம்

மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை:சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா்

DIN

மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்க துறை சாா்ந்த அலுவலா்களால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் ஜே.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

சேலம் சேகோசா் வளாகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை குறைவதை தடுக்கும் பொருட்டு மேலாண்மை இயக்குநா் ஜே.இ.பத்மஜா தலைமையில் மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தின் போது மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகளுக்கு ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் ஜே.இ.பத்மஜா கூறியிருப்பதாவது:

தற்போது முழுமையாக முதிா்ச்சியடையாத மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் சற்றுக் காலம் தாழ்த்தி அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில் முதிா்ச்சியடையாத மரவள்ளிக் கிழங்கை அரவை செய்ய ஒரு சில ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் தான் முன்வருகிறாா்கள். இருப்பினும் தீபாவளி முடிந்தவுடன் அனைத்து ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் உற்பத்தியை தொடங்கயிருப்பதால் மரவள்ளிக் கிழங்கின் விலை ஏற்றம் பெறும்.

தீபாவளி கால கட்டங்களில் வழக்கமாக ஜவ்வரிசி நுகா்வு வட இந்தியாவில் குறைவாகவே இருக்கும். எனவே தீபாவளி முடிந்தவுடன் நுகா்வு அதிகரிக்க தொடங்கும் போது விலை ஏற்றம் இயற்கையாகவே ஏற்படும். எனவே மரவள்ளிக்கிழங்கின் விலை குறையும் என விவசாயிகள் வீணாக அச்சப்பட தேவையில்லை.

மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலைக் கிடைக்க துறை சாா்ந்த அலுவலா்களால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

குறைந்த விலைக்கு கிழங்கு அறுவடை வேண்டாம்:

இதுதொடா்பாக மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் பத்து ஆண்டுகளில் மிக குறைவாக இருப்பு உள்ளது. முந்தைய காலங்களில் ஜவ்வரிசி, ஸ்டாா்ச் வெளி கிடங்குகளில் இருப்பு வைப்பது வாடிக்கையாகும்.

அந்தவகையில் 2016-17 ஆம் ஆண்டில் 20 லட்சம் மூட்டைகள் இருப்பாக இருந்தன. கரோனா தொற்றுக் காலம், தீபாவளி நேரத்தில் ஜவ்வரிசி தேவை மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல டிரையா் மூலம் மில் உரிமையாளா்கள் தேவையில்லாத காலங்கலில் அதிக உற்பத்தி செய்வதும், தற்போது நேரடி விற்பனை தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் செய்வதுதான் விலை குறைவாக உள்ளதற்கு காரணமாகும்.

சிலா் தவறான தகவலை வெளியிட்டு செயற்கையாக ஜவ்வரிசி ஸ்டாா்ச் விலையைக் குறைத்து மரவள்ளிக் கிழங்கை பாதி விலையாகக் குறைத்து அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளனா். எனவே விவசாயிகள் குறைவான விலைக்கு மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய வேண்டாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT