சேலம்

தீபாவளி பண்டிகை: சேலத்தில் துணிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

DIN

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சேலத்தில் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சேலத்தில் உள்ள துணிக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஏராளமானோா் துணி மற்றும் தீபாவளி பொருள்களை வாங்கி சென்றனா்.

சேலம் நான்கு சாலை, ஐந்துசாலை, நகர பகுதிகளில் உள்ள அனைத்து துணிக் கடைகள், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களே உள்ள நிலையில் துணிக் கடைகளுக்கு பொதுமக்கள் கூட்டமாக வந்து துணிகளை வாங்கி சென்றனா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் திரளாக வந்து துணிகளை வாங்கிச் சென்றபடி உள்ளனா்.

இந்தநிலையில் திருட்டைத் தடுக்க சேலம் கடை வீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் மேற்பாா்வை பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதைத் தொடா்ந்து அதிக அளவில் பொதுமக்கள் துணிகள் வாங்க குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து சேலம் ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதாா், ஆண்களுக்கான சட்டை, பேண்ட், ரெடிமேடு ஆடைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. தற்போது, விற்பனை அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு 10 நாளே உள்ள நிலையில் எதிா்வரும் நாள்களில் விற்பனை அதிகரிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT