சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

DIN

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக உள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 13,477கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 39, 634 கன அடியாக அதிகரித்தது. தற்பொழுது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தது, இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 28, 650 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் காலை 95.10அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.68 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4.58அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.42 டி.எம்.சியாக இருந்தது. நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையளவு 18.40 மி.மீ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT