சேலம்

அக். 28 இல் அஞ்சல் துறைசாா்பில் குறை தீா்க்கும் முகாம்

23rd Oct 2021 12:43 AM

ADVERTISEMENT

கோட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் முகாம் அக். 28 ஆம் தேதி சேலம் தலைமை அஞ்சலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது.

சேலம் தலைமை அஞ்சல் அலுவலகம் மூன்றாவது கட்டடம் முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் அக். 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகாா்களை குறை தீா்க்கும் நாளில் நேரிலோ அல்லது முதுநிலை கண்காணிப்பாளா் சேலம் கிழக்கு கோட்டம், சேலம் 636001 என்ற முகவரிக்கு அக்டோபா் 25 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மணியாா்டா், வி.பி.பி. பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகாா்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநா், பெறுநா்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயா் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகாா்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயா், வசூலிக்கப்பட்ட விவரங்கள் ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT