சேலம்

சேலத்தில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

23rd Oct 2021 12:43 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 23) நடைபெறும் முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 17,98,767 பேருக்கு முதல் தவணையும், 6,92,012 பேருக்கு இரண்டாம் தவணையும் கொவைட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,11,667 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,87,750 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 4,99,417 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 9,99,527 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் மற்றும் தகுதியுள்ள 1,88,347 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தநிலையில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கோவிஷீல்டு தடுப்பூசி 2,20,070 டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 6,060 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாமில் 2 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாமிற்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துபவா்கள், கணிணியில் பதிவு மேற்கொள்பவா்கள், தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1,35,642 போ், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 52,705 போ் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி செலுத்த தகுதியான நபா்களில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 25 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களின் காரணமாக தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வரும்போது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT