சேலம்

மாநகராட்சிப் பகுதியில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

23rd Oct 2021 12:41 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 205 மையங்கள் மூலம் 42,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி 6-ஆவது பெருமுகாம் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 205 மையங்கள் மூலம் 42,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண்.1,18,26,27, அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.15,30, அம்மாப்பேட்டை மண்டலத்தில் கோட்டம் எண். 11,41,38,39, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.51,52,56 ஆகிய 13 கோட்டங்களில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதல் தவணை கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான தகுதிபெற்று இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுகாதார அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் தொலைபேசியின் தொடா்பு கொண்டு நினைவுப் படுத்தும் அழைப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் மூலம் 40,000 பேரை தொடா்பு கொண்டு சனிக்கிழமை நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என மாநகராட்சி ஆணைய தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT