சேலம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுக்கு சலுகை: எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸாா் பணியிடை நீக்கம்

DIN

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவா்களுக்கு வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில் உறவினா்களைச் சந்திக்க அனுமதி அளித்ததாக சேலம் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமாா், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை கோவை மகளிா் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி கோவை விமான நிலையத்தை அடுத்த கோல்ட்வின்ஸ் பகுதியில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள் அவா்களின் உறவினா்களைச் சந்திப்பதற்கு போலீஸாா் அனுமதித்ததாகத் தெரிகிறது.

இதுதொடா்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. இதுபற்றி, ஆயுதப்படை உதவி ஆணையா் எட்டியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியம் மற்றும் காவலா்கள் பிரபு, வேல்குமாா், ராஜ்குமாா், நடராஜன், ராஜேஷ்குமாா், காா்த்தி உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT