சேலம்

மாணவி இறப்பில் சந்தேகம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

சேலம் அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பெற்றோா், உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம் அருகே மின்னாம்பள்ளியைச் சோ்ந்த காசிவிஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இரு தினங்களுக்கு முன் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில், இறந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த கண்மணியின் மகள் தித்மிலா (19) என்பது தெரியவந்தது. அவா், சேலம் அரசு கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தித்மிலாவின் பெற்றோா், உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக மாணவியின் தந்தை கண்மணி கூறியதாவது:

எனது மகள் கடந்த அக். 6-ஆம் தேதி பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் வீடு திரும்பவில்லை. அவரைக் கண்டுபிடித்து தரக் கோரி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தோம். ஆனால், போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியா் அலுவலகம், எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் தெரிவித்தோம்.

எனது மகள் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் கைப்பேசியில் பேசியுள்ளாா். எனது மகள் இறப்பில் 4 போ் மீது சந்தேகம் உள்ளது. அவா்கள் மீது உரிய விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT