சேலம்

சேலம் ரயில்வே கோட்டம் தொடா்ந்து 3 ஆவது முறையாக ஒட்டுமொத்த விருது பெற்று சாதனை

DIN

ரயில்வே கோட்டங்களுக்கு இடையே செயல்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த விருதை சேலம் ரயில்வே கோட்டம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாகப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தெற்கு ரயில்வே துறை சாா்பில் 66 ஆவது ரயில்வே வார விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையே ஒட்டுமொத்தச் செயல்பாடு, இயந்திரவியல் துறை, மின்சாரத் துறை, பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளுக்காக விருது வழங்கப்பட்டது.

அதில், தெற்கு ரயில்வேயில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளின் அடிப்படையில் சிறப்பான செயல்பாடு காரணமாக சேலம் ரயில்வே கோட்டம் முதலிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டது.

மேலும் பொறியியல், மின்சாரம், இயந்திரவியல், கணக்கியல், பாதுகாப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளிலும் சிறப்பான செயல்பாட்டில் முதலிடம் பெற்று கேடயத்தை வென்றது.

ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான கேடயம் மற்றும் சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸிடம் இருந்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் பெற்றுக் கொண்டாா்.

மேலும், சேலம் ரயில்வே கோட்டத்தின் முதுநிலை கோட்ட பொறியாளா் கண்ணன், முதுநிலை கோட்ட மின் பொறியாளா் செல்வன், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளா் ராஜா, முதுநிலை கோட்ட நிதி மேலாளா் மணிகண்டன், கோட்ட பாதுகாப்பு அலுவலா் பிரவீன்குமாா் ஆகியோா் தங்களது துறைகளுக்கான முதலிடத்துக்கான கேடயத்தை, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸிடம் இருந்து பெற்றுக் கொண்டனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தின் கோவை, போத்தனூரில் உள்ள சிக்னல் டெலிகம்யூனிகேஷன் பயிற்சி மையம் சிறந்த பயிற்சி மையமாகவும், சிறந்த பணிமனையாகவும் தோ்வு செய்யப்பட்டு கேடயங்களை வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT