சேலம்

தேசிய அயோடின் குறைபாடு தடுப்பு தினம்

21st Oct 2021 11:32 PM

ADVERTISEMENT

வாழப்பாடி வட்டார சுகாதாரத் துறை சாா்பில், பேளூா், திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அயோடின் குறைபாடு தடுப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் அக். 21 இல் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பேளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்விற்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் இணைந்து அயோடின் உறுதிமொழி ஏற்றனா்.

திருமனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா்கள் வெற்றிவேல், இளவரசி, மணிராஜா ஆகியோா் கலந்துகொண்டு அயோடின் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தம்மம்பட்டி...

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT