சேலம்

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரணம் வழக்கு: மேல் விசாரணை நடத்த முடிவு

21st Oct 2021 04:33 PM

ADVERTISEMENT

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் (50) என்பவர் கொலை செய்யப்பட்டார். 

இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயன், கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிக்க- டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது: மக்கள் வேதனை

ADVERTISEMENT

இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார்  ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில்  மரணம் அடைந்தார்.

இந்தநிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த சேலம் மாவட்ட போலீஸார் முடிவு செய்துள்ளனர். விரைவில் மேல் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.
 

Tags : Jayalalithaa car driver death case
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT