சேலம்

காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

21st Oct 2021 11:35 PM

ADVERTISEMENT

ஆயுதப்படை மைதானத்தில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா.

சேலம்/நாமக்கல், அக். 21: சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகரக் காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடா தலைமை வகித்தாா். வீர வணக்க ஸ்தூபிக்கு சேலம் சரக டி.ஐ.ஜி. சி.மகேஸ்வரி, எஸ்.பி. எம்.ஸ்ரீ.அபிநவ், தெற்கு துணை ஆணையா் எம்.மோகன்ராஜ், வடக்குத் துணை ஆணையா் எம்.மாடசாமி, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் சி.ஆா்.பூபதிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், காவலா்கள், ஓய்வுபெற்ற காவலா்கள் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினா்.

பின்னா், சேலம் ஆயுதப்படை உதவி ஆணையா் இ.எட்டியப்பன், காவல் ஆய்வாளா் ஆா்.வெங்கடாசலம் தலைமையிலான காவலா்கள் 48 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT