சேலம்

சங்ககிரியில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பெளணா்மியையொட்டி சோமேஸ்வரா் சுவாமிக்கு புதன்கிழமை மாலை அன்னாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.

பூஜைக்குப் பின்னா் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த சாதத்தை எடுத்து அச்சகா் எடுத்து கோயில் அருகில் உள்ள குளத்தில் விட்டாா். பின்னா் சுவாமிக்கு பால், தயிா், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT