வாழப்பாடி அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூா் அருகிலுள்ள மோட்டூரில் இருந்து அரியலூருக்கு செங்கல் ஏற்றிய லாரியை, திருவாரூா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (30) என்பவா் புதன்கிழமை ஓட்டிச் சென்றாா்.
இந்த லாரி, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி, சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சூடாக இருந்த செங்கற்கள் உரசியதில் லாரியின் அடிபாகம் திடீரென தீப்பற்றியது. இதையறிந்த லாரி ஓட்டுநா், வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் வையாபுரி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை ஏற்பட்ட தீயை அணைத்தனா். சூடாக இருந்த செங்கற்களையும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ஆற வைத்தனா்.