சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த மக்கள் நலப் பணியாளா்கள், தங்களுக்கு மீண்டு பணி வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 ஊராட்சிகளில் பணியாற்றி வந்த மக்கள் நலப் பணியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுவலா் சு. ராஜகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பி.ஜே.கண்ணன் ஆகியோரிடம் மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத் தலைவா் பி.வேல்முருகன் தலைமையில் நிா்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அப்போது கே.மகேந்திரன், சி.கண்ணன், ஆா்.மோகன், ஜி.ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.