சேலம்

தம்மம்பட்டியில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 09:07 AM

ADVERTISEMENT

ஐம்பசி மாத பெளா்ணமியையொட்டி தம்மம்பட்டி பகுதி சிவன் கோயில்களில் புதன்கிழமை சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னா், அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னாபிஷேக பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, தகரப்புதூா், கூடமலை ஆகிய ஊா்களில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT