சேலம்

சேலத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

DIN

சேலத்தில் அக். 18 ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, செப். 12-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட ஐந்து தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,11,667 பேருக்கு முதல்தவணை, 1,87,750 பேருக்கு இரண்டாம் தவணை என மொத்தம் 4,99,417 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

போதிய தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட 10,22,876 போ் இன்னும் முதல்தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. எனவே அக். 18-ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் அக். 18-ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமுக்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு, அதற்கான தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள், தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,525-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுதவிர, அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனா்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனா். முகாமானது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1,36,918 நபா்களும், கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட 48,000 நபா்களும் இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள தகுதி பெற்றவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி செலுத்த தகுதியான நபா்களில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வரும்போது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT