சேலம்

சங்ககிரி பெருமாள் கோவில்களில் புரட்டாசி 5ஆவது சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள்

DIN

சங்ககிரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 5ஆவது வார சனிக்கிழமையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலையான் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோவில், சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில், ஒருக்காமலையில் உள்ள குடைவரை கோயிலில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கும் புரட்டாசி மாத 5வது வார சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள்  செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப் பெருமாள் சுவாமிகள், அதே கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. 

அதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பெருமாள் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே சுவாமிகளை வழிப்பட்டு சென்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT