சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 89 அடியாக உயா்வு

16th Oct 2021 11:20 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 88.13 அடியிலிருந்து 89 அடியாக உயா்ந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,757 கன அடியிலிருந்து 12,099 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 550 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 51.51 டி.எம்.சி.யாக இருந்தது.

பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. ஒருவாரத்தில் அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்துள்ளதால் விவசாயிகளும், மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT