சேலம்

நேசக்கரங்கள் இல்லத்தில் கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்

16th Oct 2021 01:56 AM

ADVERTISEMENT

சேலம், அய்யந்திரு மாளிகையில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போா் இல்ல மாணவ, மாணவியா் இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நேசக்கரங்கள் இல்லத் தலைவா் எஸ்.செல்லதுரை தலைமை தாங்கினாா். இதில் அப்துல் கலாமின் சிந்தனைகள், பொன்மொழிகள் குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், இந்திய சாரண, சாரணியா் மாவட்டச் செயலாளா் செளந்தரபாண்டியன், சாரணா் இயக்க குடியரசுத் தலைவா் விருதுபெற்ற காளியப்பன், அலுவலக மேலாளா் துரைசாமி, இல்லக் கண்காணிப்பாளா் சண்முகப்ரியா, விடுதி வாா்டன் கோமதி, பானு, மகாதேவன், மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT