சேலம்

சங்ககிரியில் நாளை இலவச ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை முகாம்

9th Oct 2021 04:19 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கமும், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை முகாம், சங்ககிரி ரோட்டரி சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில், மூட்டுவலி, ரத்த அழுத்தம், மன அழுத்தம், பித்தப்பை கற்கள், தூக்கமின்மை, அல்சா் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 73391 12299, 99655 33370 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT