சேலம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 100 மையங்களில் தடுப்பூசி முகாம்

4th Oct 2021 04:16 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 100 மையங்களில் கரோனா தடுப்பூசி பெருமுகாம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி நான்காவது பெருமுகாம் 100 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடி மையங்களிலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெருமுகாம் சிறப்பாக அமைய தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினி பதிவாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பள்ளி ஆசிரியை மற்றும் ஆசிரியா்கள் முன்னோடி அதிகாரிகள், மண்டல அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், களப்பணியாளா்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் பணியாளா்கள் என 1750-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கடந்த செப்.12, 19, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட ராஜாஜி சாலை ஸ்ரீசாரதா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

அப்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், உதவி ஆணையாளா் வெ.மணிமொழி, உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபி சக்ரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT