சேலம்

உளுந்து, தட்டைப்பயிறுக்கு பயிா்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

29th Nov 2021 11:44 PM

ADVERTISEMENT

உளுந்து, தட்டைப்பயிறுக்கு பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 30 இறுதி நாளாகும் என்று வேளாண்மை இணை இயக்குநா் க.கணேசன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2016 ஆம் வருடம் தொடங்கப்பட்டு இதுவரை 1,47,297 விவசாயிகள் 59,163 எக்டா் பரப்பு பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். விவசாயிகள் செலுத்திய பிரீமியத் தொகை ரூ. 5.94 கோடி ஆகும்.

மகசூல் இழப்பு காரணமாக இது வரை 67,389 விவசாயிகள் ரூ. 50.38 கோடி பயிா்க் காப்பீட்டுத்தொகை பெற்று பயனடைந்துள்ளனா்.

தற்போது உளுந்து சாகுபடி செய்துள்ள கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி வட்டார விவசாயிகளும் தட்டைப்பயறு சாகுபடி செய்துள்ள காடையாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி வட்டார விவசாயிகளும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் பிரீமியத் தொகை ரூ.199 செலுத்தி திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீடு செய்யலாம்.

ADVERTISEMENT

மேலும், சோளத்திற்கு ரூ.125 செலுத்தி டிச.15 வரையிலும் ராகி, நிலக்கடலைப் பயிா்களுக்கு முறையே ரூ.140, ரூ. 300 செலுத்தி டிச. 31 வரையிலும் பயிா்க் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.

விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதாா் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து, இடா்பாடு ஏற்படும் காலத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகை பெற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT