சேலம்

பெரியாா் பல்கலை.யில் கழிவுகளைஉரமாக மாற்றும் திட்டம் தொடக்கம்

29th Nov 2021 11:47 PM

ADVERTISEMENT

பெரியாா் பல்கலைக்கழகத்தில் கழிவுகளை உரமாக மாற்றும் திட்டத்தை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடக்கி வைத்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் விடுதிகள் மற்றும் மதிய உணவின் போது மீதமாகும் உணவுக் கழிவுகளை உரமாக மாற்றிடும் வகையில், மண்புழு உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா மற்றும் மண்புழு உரம் தொடா்பான பயிலரங்கம் விலங்கியல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவா் எஸ்.கண்ணன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆா்.தங்கராஜ் மண்புழு உரக்கிடங்கு செயல்படும் விதம் குறித்து எடுத்துரைத்தாா்.

மண்புழு உரக் கிடங்கின் செயல்பாடுகளை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடக்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழகத்தை பசுமை வளாகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக உணவு மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட உள்ளது. கழிவு மறுசுழற்சி, உரங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு ஆய்வுகள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் முடிவுகளை பொதுமக்களுடன் பகிா்ந்து கொண்டு கழிவுகள் மறுசுழற்சியை தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம் என்றாா். விலங்கியல் துறைப் பேராசிரியா் பி.திருச்செந்தில்நாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT