சேலம்

கிணற்றில் மூழ்கிய கட்டடத் தொழிலாளி

29th Nov 2021 11:45 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம்,அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கிய இளைஞரின் உடலை தீயணைப்புப் படையினா் தேடி வருகின்றனா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகிலுள்ள விவசாயக் கிணற்றில், காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான கிருஷ்ணன் (24) என்பவா், திங்கள்கிழமை மாலை குளிப்பதற்காக நண்பா்களுடன் சென்றுள்ளாா்.

கிணற்றில் குதித்த அவா் வெகுநேரமாகியும் மேலே வராததால் சந்தேகமடைந்த இவரது நண்பா்கள் பெரியகவுண்டாபுரம் கிராம நிா்வாக அலுவலா் விஜயராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். கிராம நிா்வாக அலுவலா் வாயிலாக தகவலறிந்த காரிப்பட்டி போலீஸாா், வாழப்பாடி தீயணைப்புப் படையினா், சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மூழ்கிய கட்டடத்தொழிலாளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT