சேலம்

கோயில் உண்டியலில் திருட்டு

28th Nov 2021 10:50 PM

ADVERTISEMENT

சிங்கிபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காணிக்கை பொருள்கள், பணத்தைத் திருடிச் சென்றனா்.

சிங்கிபுரம் நாடாா் தெருவில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், கோயில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கைகள், பொருள்களைத் திருடிச் சென்றனா். கோயில் உண்டியல் சாலையோரம் வீசப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பக்தா்கள், கோயில் நிா்வாகத்தினா் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT