சேலம்

ஓமலூா் மூங்கில் ஏரி நிரம்பியது: எம்எல்ஏ மணி ஆய்வு

28th Nov 2021 10:54 PM

ADVERTISEMENT

ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள மூங்கில் ஏரி 20 ஆண்டுகள் கழித்து ஞாயிற்றுக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

மேற்கு சரபங்கா ஆற்றில் இருந்து பச்சனம்பட்டி ஊராட்சி, மூங்கிலேரிக்கு சென்ற உபரிநீரால் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் மீண்டும் சரபங்கா ஆற்றுடன் கலக்கிறது. ஏரியின் மற்றொரு பகுதியில் வெளியேறும் உபரிநீா் எம். செட்டிபட்டி ஏரிக்குச் செல்கிறது.

இதனால் எம்.செட்டிபட்டி ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி மூங்கில் ஏரியைப் பாா்வையிட்டு வழிபாடு நடத்தினாா். எம்.செட்டிபட்டி ஏரி நிரம்பினால் உபரிநீா் வாய்க்கால்கள் மூலம் வெளியேறும், அதனால் பாப்பாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும்.

எனவே, பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ மணியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, எம்.செட்டிப்பட்டி உபரிநீா் வாய்க்கால்களைப் பாா்வையிட்ட எம்எல்ஏ, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் அமைத்து தருவதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, ஓமலூா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல், ஓமலூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலா் நதியா சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சண்முகம் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT