சேலம்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன்

28th Nov 2021 10:56 PM

ADVERTISEMENT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பேரவைத் தலைவா் அப்பாவு, சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் ‘சட்டப் பேரவை நிறைவேற்றும் தீா்மானங்கள் ஆளுநா், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், அதுகுறித்து பதில் வருவதில்லை’ எனக் குற்றம்சாட்டியுள்ளாா். இது பேரவைகளை அவமதிக்கும் செயலாகும்.

நீட் தோ்வு குறித்து ஆளுநரிடம் முதல்வா் விடுத்த கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியக் குழு ஆய்வு செய்த பிறகு மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்குவதற்கு முன்னதாக மாநில அரசின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ரூ.4 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் உதவியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் முன்னாள் முதல்வரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT