சேலம்

நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ்பள்ளி மாணவி உலக சாதனை

DIN

சேலம், குண்டுக்கல்லூா் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.பி.அஸ்வதா 12 மணி நேரம் 30 நிமிடங்களில் 100 வகையான பல்வேறு அழகிய கைவினைப் பொருள்களை செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளாா்.

இவரது உலக சாதனையை வோ்ச்சு புக் ஆஃப் வேல்ட் ரெக்காா்ட் நிறுவனா் பி.சுரேஷ்குமாா் மற்றும் என்.சந்தோஷ், ஹேமலதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு மாணவியின் உலக சாதனையை அங்கீகரித்து உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கி பாராட்டினா்.

மாணவி எம்.பி.அஸ்வதா கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று முன்னாள் குடியரசு தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் நினைவைப் போற்றும் விதமாக 600 சதுர அடி, சாட் பேப்பரில் 2 மணி நேரம் 15 நிமிடங்களில் ஸ்பிரே பெயிண்டிங் மூலம் அவரது ஓவியத்தை வரைந்து உலக சாதனை புரிந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் இரு உலக சாதனைகளை நோட்ரி டேம் பள்ளி முதல்வா் அருட்சகோதரா் பாலசாமி, துணை முதல்வா் ஆண்டனி பாரா, ஆலோசகா் கில்பா்ட் மற்றும் ஆசிரியா்களும் மாணவ, மாணவிகளும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT