சேலம்

சேலம் காஸ் சிலிண்டா் வெடி விபத்து:பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

DIN

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, அரசு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம், கருங்கல்பட்டி பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து அடுத்தடுத்த வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும், 12 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கருங்கல்பட்டிக்குச் சென்று விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்த எடப்பாடி கே.பழனிசாமி, பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கருங்கல்பட்டி, பாண்டுரங்கவிட்டல் தெருவில் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவா்கள் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களுக்கு அரசு வீடு கட்டித் தர வேண்டும் அல்லது வீடு கட்டுவதற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும். சமையல் செய்யும் போது எரிவாயு உருளையில் கசிவு உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என்றாா்.

பின்னா், இந்த விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT