சேலம்

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

26th Nov 2021 12:13 AM

ADVERTISEMENT

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சேலம், கருங்கல்பட்டி, பாண்டுரங்கன் விட்டல் தெருவில் கோபி என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பத்மநாபன், தேவி, காா்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய 5 நபா்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 பேருக்கு தலா ரூ. 50,000க்கான காசோலை என மொத்தம் ரூ. 31.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT