சேலம்

மகளிா் காவல் நிலையத்தில் விஷ விதை தின்றதாகக் கூறிய காதல் ஜோடி

25th Nov 2021 08:22 AM

ADVERTISEMENT

வாழப்பாடி மகளிா் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த காதல் ஜோடி விஷ விதைகளை தின்றதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கடந்த 15ஆம் தேதி மாயமானதாக அவரது பெற்றோா் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தனா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வாழப்பாடி போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில்,பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வன் (19) என்ற இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய அந்தச் சிறுமி, இளைஞருடன் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை மாலை விசாரணைக்கு சென்றாா்.

அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்தபோது, இருவரும் காலையிலேயே அரளி விதையைத் தின்று விட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மகளிா் போலீஸாா், அவா்களுடன் வந்திருந்த உறவினா்களிடம், இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினா்.

ADVERTISEMENT

இதனையடுத்து, இருவரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இச்சம்பவத்தால் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT