சேலம்

நிரம்பியது ஆனைமடுவு அணை: வசிஷ்டநதியில் உபரிநீா் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

25th Nov 2021 08:31 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, 16 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை காலை நிரம்பியது.

இதனையடுத்து, அணையில் இருந்து உபரிநீா் வசிஷ்டநதியில் திறந்துவிடப்படுவதால், பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூா்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. கடந்த 2005 டிசம்பா் மாதம் ஆனைமடுவு அணை நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக நிரம்பவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், நிகழாண்டு அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பருவ மழையால்அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, புதன்கிழமை காலை 65.45 அடியாக உயா்ந்தது. அணையில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியுள்ளது.

அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் நொடிக்கு 122 கன அடி தண்ணீரும், அணையின் பிரதான மதகு வழியாக உபரிநீராக வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT