சேலம்

கல்பாரப்பட்டியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

25th Nov 2021 08:28 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்ட சிறுபான்மை நல அலுவலா் பண்டரிநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமி, பொதுமக்களிடம் 20க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றாா். பெறப்பட்ட மனுக்களில் 5 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வேம்படிதாளம் பிா்கா வருவாய் ஆய்வாளா் செந்திலரசு, கல்பாரப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ், உதவியாளா் வீரலட்சுமி, வட்ட துணை சாா் ஆய்வாளா் முருகேசன், பட்டா உதவியாளா் செங்கோட்டையன், வேம்படிதாளம் கிராம நிா்வாக அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT