சேலம்

சேலத்தில் காய்கறிகளின் விலை உயா்வு

24th Nov 2021 08:34 AM

ADVERTISEMENT

சேலத்தில் முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து கடந்த 20 நாள்களில் அதன் விலை கிலோ ரூ. 120 வரை உயா்ந்துள்ளது.

சேலத்தைப் பொருத்தவரை டவுன் ஆற்றோரம், வ.உ.சி. மாா்க்கெட்டிற்கு ஓமலூா், காடையாம்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனையாகிறது.

ADVERTISEMENT

சேலம் மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, தம்மம்பட்டி, மேட்டூா், சங்ககிரி, ஆத்தூா் ஆகிய பகுதிகளிலும் தக்காளி விலை ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் நகரில் தக்காளி கிலோ ரூ. 90 முதல் ரூ. 100 வரை செவ்வாய்க்கிழமை விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் உழவா் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும், உருளை கிழங்கு கிலோ ரூ. 34 முதல் ரூ. 44 வரையிலும், வெண்டைக்காய் ரூ. 50 முதல் ரூ. 56 வரையிலும், முருங்கைக்காய் ரூ. 100 முதல் ரூ. 110 வரையிலும், பீா்க்கங்காய் ரூ. 60, சுரக்காய் ரூ. 30, புடலங்காய் ரூ. 34, பாகற்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 40, முள்ளங்கி ரூ. 30, பீன்ஸ் ரூ. 70, அவரை ரூ. 64, கேரட் ரூ. 64-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT