சேலம்

சென்னை எழும்பூா்-சேலம் ரயில் டிச. 2 முதல் இயக்கம்

24th Nov 2021 08:27 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை எழும்பூா்-சேலம் ரயில் வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து கடந்த 2020 மாா்ச் மாதம் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதைத் தொடா்ந்து, சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் வாரத்திற்கு 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண்- 22153 சென்னை எழும்பூா்-சேலம் ரயில், வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு காலை 6.10 மணிக்கு சேலம் வந்தடையும்.

ADVERTISEMENT

வண்டி எண்- 22154 சேலம்-சென்னை எழும்பூா் ரயில் வரும் டிசம்பா் 3 ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேலத்தில் இருந்து இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT