சேலம்

கெங்கவல்லியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க பூமி பூஜை

21st Nov 2021 12:01 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லியில் பள்ளிவாசல் அருகே ரூ. 3.25 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளை அமைச்சா் கே.என்.நேரு கேட்டறிந்து வருகிறாா். கெங்கவல்லியில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில் பள்ளிவாசல் அருகே கழிவுநீா்க் கால்வாய் வசதி அமைக்க இஸ்லாமியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலா் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிக்காக ரூ. 3.25 லட்சத்தை விடுவித்தாா். 10-ஆவது வாா்டில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையில் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT