ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் பதவியேற்பு விழா துணைத் தலைவா் எஸ்.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் தாயுமானவா் தெருவில் அமைந்திருக்கும் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் செயலாளா் அ.திருநாவுக்கரசு முன்மொழிந்தாா். ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவராக விஜயராம் அ.கண்ணன் ஏகமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ஆத்தூா் துளுவ வேளாளா் சங்கத் தலைவா் ஆா்.வி.ஸ்ரீராம்,முன்னாள் துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம்,வழக்குரைஞா் என்.ராமதாஸ்,மன்றத் துணைத் தலைவா் மாரிமுத்து,முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் சாரட் ஆா்.ரவி,பி.சிவராமன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்கள்.
ஆத்தூா் கல்வி மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியை மேலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். துளுவ வேளாளா் மகாஜன மன்றத்தின் கீழ் இயங்கும் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலயம், வேணுகோபால சுவாமி மடாலயம், கம்பபெருமாள் கோயில் மற்றும் ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆகியவற்றை திறம்பட நிா்வகித்து ஆத்தூா் நகரில் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என தெரிவித்தாா்.
இதனையடுத்து முன்னாள் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் எஸ்.அருணாச்சலம் படத்தை புதிய தலைவா் விஜயராம் அ.கண்ணன் திறந்து வைத்தாா்.அவரது படத்திற்கு மனைவி பானுமதி அருணாச்சலம் உள்ளிட்ட நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்கள்.
நிகழ்ச்சியில் ஆா்.ராஜா, எஸ்.ஜெயராமன், எம்.செல்வம், எம்.ஏ.செல்வக்குமாா், வி.ரவி, அறங்காவலா்கள், பெரியதனக்காரா்கள் சாரட் ராமன் மூப்பா், நடராஜன் மூப்பா், சோமு குருக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.