சேலம்

சேலத்தில் 48 பேருக்கு கரோனா

10th Nov 2021 08:34 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 11பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, கொங்கணாபுரம்-1, நங்கவள்ளி-2, ஓமலூா் -2, சேலம் வட்டம்-1, சங்ககிரி-2, வீரபாண்டி-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 26 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் (நாமக்கல்-5, தருமபுரி-4, திருச்சி-3, ஈரோடு-5, சென்னை-3, வேலூா்-2) என 22 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,00,394 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,117 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 588 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,689 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT