சேலம்

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

9th Nov 2021 02:24 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பழைய காலனியைச் சோ்ந்தவா் அழகப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (80). அழகப்பன், சில ஆண்டுக்கு முன் இறந்தாா். பழனியம்மாள், தனது மகன் வீட்டில் இருந்து வந்தாா். இவா் சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து சென்ற பழனியம்மாள், வீட்டிற்கு வரவில்லை. அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில், அருகில் இருந்த 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரிந்தது. அவரைக் காப்பாற்ற அருகில் யாரும் இல்லாததால், நீரில் மூழ்கி பழனியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரா்கள், நிலைய அலுவலா்(பொ)வேலுமணி தலைமையில், பொதுமக்கள் உதவியுடன் பழனியம்மாளின் உடலை கிணற்றுக்குள் இருந்து மீட்டு, தம்மம்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனியம்மாளின் உடலை, பிரேதப்பரிசோதனைக்காக, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT