சேலம்

தேசிய மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம்:

9th Nov 2021 02:16 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியை சோ்ந்த சிறைக்காவலா், தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வளையக்காரனூா் பகுதியை சோ்ந்தவா் வெங்கடேசன் (28). திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிந்து வரும் இவா், மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றாா்.

இதனையடுத்து, கோவா மாநிலத்தில் அக். 29 முதல் 31 வரை நடைபெற்ற 9-ஆவது தேசிய மல்யுத்தப் போட்டியில், தமிழ்நாடு சீனியா் பிரிவில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சோ்த்த சிறைக்காவலா் வெங்கடேசனுக்கு, இப்பகுதி பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள், காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT